phpFaber TopSites 3.5
HooFoo.Net Manage another Free top blog top site for Blogger. Add Your blog to topblog.hoofoo.net and get more traffic to your blog , If you have not blog create it now from Blogs.lk | Blogger | WordPress
Total WebLog listed: 30
50000 Blogger Blog Index And 4000 Wordpress Blog Index
Blogger Blog Index | Wordpress Blog Index |Blog.co.in Index
Main Page | Browse Blog Categories | Top Winners Blog | Join TopBlog | Edit Member Info | Lost Code | Lost Password | FAQ | RSS
A-Blog    B-Blog    C-Blog    D-Blog    E-Blog    F-Blog    G-Blog    H-Blog    I-Blog    J-Blog    K-Blog    L-Blog    M-Blog    N-Blog    O-Blog    P-Blog    Q-Blog    R-Blog    S-Blog    T-Blog    U-Blog   V-Blog  W-Blog    X-Blog    Y-Blog    Z-Blog   
Page-1    Page-2    Page-3    Page-4    Page-5    Page-6    Page-7    Page-8    Page-9    Page-10    Page-11    Page-12    Page-13    Page-14    Page-15    Page-16    Page-17    Page-18    Page-19    Page-20    Page-21    Page-22   

வாழ்க்கைப் பயணம்

எனது சில கிறுக்கல்கள்…. உங்களுக்காக…..

Faviconபயனற்ற செல்பேசிகளுக்குப் பின்னால்... 9 Jan 2009, 1:30 am


பழுதடைந்து எங்கோ ஒரு மூளையில் கிடத்தி வைக்கப்படிட்டிருக்கும் உங்கள் செல்பேசியை என்ன செய்வீர்கள்? இது மிகவும் எளிமையான கேள்வியே. இதற்கான விடை காண உங்கள் சிந்தனை விதவிதமாக சிதறியிருக்கும். இப்படிதான் செற்பமான சில கேள்விகள் நம்மை சிந்திக்க வைத்துவிடுகிறது.

அண்மையில் நோக்கியா 'NOKIA' நிறுவனத்தினர் ஓர் ஆய்வை மேற்கொண்டார்கள். அந்த ஆய்வு 13 நாடுகளில் வாழும் 6500 ஆட்களிடம் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் செல்பேசி பயன்படுத்துவோரிடையே 4 முக்கிய விடைகளை கண்டறிந்தார்கள்.

அவர்களில் 44 விழுக்காட்டினர் பழுதடைந்த செல்பேசியை வீட்டில் வைத்துக் கொள்வதாக கூறி இருக்கிறார்கள். 33 விழுக்காட்டினர் அதனை மற்றவரிடம் கொடுத்துவிடுவதாகவும், 16 விழுக்காட்டினர் விற்றுவிடுவதாகவும் 4 விழுக்காட்டினர் அதை தூக்கி எறிந்துவிடுவதாகவும் கூறி இருக்கிறார்கள்.

3 விழுக்காட்டினர் மட்டுமே செல்பேசியை மறுபயனீட்டுக்கு அனுப்புவதாய் சொல்லி இருக்கிறார்கள். ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 72 விழுக்காட்டினருக்கு செல்பேசி மறுபயனீடு என்பது தெரியாமலே இருந்திருக்கிறது. காகிதம் மற்றும் உலோக பொறுட்களின் மறுபயனீட்டைப் போல் செல்பேசி மறுபயனீடு பிரபலமில்லாததும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

நாம் வாங்கும் மின்கருவிப் பொருட்கள் பழுதடையுமாயின் குறைந்தபட்சமாக அது ஏதோ ஒரு வகையில் பயனளிக்கக் கூடியதாகவே அமையும். பழுதடைந்த செல்பேசிக்கும் மதிப்பிருக்கும் என்பது பலருக்கும் தெரியாமலே இருக்கிறது. செல்பேசியில் இரும்பு, செம்பு, நிக்கல் மற்றும் தங்கம் போன்ற உலோகப் பொருட்கள் அடங்கியுள்ளது. ஆனால் நாம்மில் பலரும் அதை உணர்வதில்லை. பழுதடைந்தால் அவற்றை எறிந்து விடுகிறோம்.

செல்பேசி அளவில் சிறியது. அதை போலவே அதனுள் இருக்கும் உலோகங்களும் சிறிய அளவிலேயே இருக்கும். ஆகையால் பழுது போன செல்பேசிகளை மறுசுழற்சிக்கு அனுப்புவோமானால் அது பலருக்கும் நம்னை பயக்கும். முக்கியமாக இயற்கைக்கு நன்மை செய்வதாய் அமையும்.
3 பில்லியன் செல்பேசிகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுமானால் அதில் இருக்கும் 240 000 டன் கணிமங்களை சேமிக்க முடியும். அது போக தொலைபேசி போன்ற மின் சாதனத்தில் இருந்து வெளிபடும் நச்சு வளியையும் கட்டுபடுத்த முடியும். 3 பில்லியன் செல்பேசிகளில் வெளிபடும் நச்சு வளியானது 4 மில்லியன் ஊர்திகளில் வெளிபடும் நச்சு புகைக்கு சமமென தெரிவித்துள்ளது நோக்கியா நிறுவனம்.

கையடக்கப் பேசிகளை மறுசுழற்சி செய்யும் முதன்மை நிறுவணங்களில் ஒன்று சிங்கையில் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவணத்தின் பெயர் Tess-Amm என்பதாகும். பல மின் கருவிகளையும் மறுசுழச்சி செய்து அதன் உள் அடக்கங்களை பிரித்து எடுத்து மறுபயனீட்டுக்கு அனுப்புவது இவர்களின் தலையாய செயல்.

ஒரு கிலோகிராம் தங்கம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 150000 முதல் 176000 வரையிலான கையடக்க பேசிகளை மறுசுழற்சி செய்தாக வேண்டும். மறுசுழற்சி நிறுவனங்கள் கையடக்க்கப் பேசியை தவிர்த்து வேறு பல தொழில்நுட்பக் கருவிகளையும் மறுசுழற்சி செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கு கிடைக்கும் கனிமங்களும் அதிகமாகவே இருக்கும்.

இன்றய நாட்களில் ஒருவருக்கு ஒரு கையடக்கப்பேசி என்பது போய் ஒருவருக்கு இரண்டு முன்று என்றாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் கையடக்கப் பேசிகளின் விலைகளும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பொது மக்கள் பயன்படுத்தவும் ஏதுவாக அமைந்துவிட்டது.

மறுசுழற்சி பூமியில் குறைந்து வரும் கனிம கட்டுப்பாட்டிற்கு உதவியாய் அமையும் என்பது உறுதி. இயற்கையின் அழிவையும் பாதுக்காக வழி செய்கிறது. தங்க ஆலை வேலைகளின் போது காற்று, நிலம், நீர் என பலவும் மாசுபடுகின்றன.

பிரேசில், ஃகியானா, கானா, வெனிசுலா மற்றும் ருமேனியா போன்ற நாடுகளில் தங்கச் சுரங்க வேலைபாடுகள் பல காலமாக இயற்கைக்கு பாதகமாகவே இருந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் அமேரிக்காவின் நிவாடா எனும் பகுதியில் ஒரு தங்கச் சுரங்கள் மூடப் பட்டது. சுரங்க வேலைக்காக வெளியேற்றப்பட்ட அதிகமான மெர்குரி அமிலத்தினால் அச்சுற்று வட்டாரத்தின் நீர்நிலைப்பகுதிகள் பாதிப்படைந்ததே இதற்குக் காரணம்.

மெர்குரியை தவிர்த்து மேலும் பல வேதிப்பொருட்களை தங்கச் சுரங்க வேலைகளுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது வேறு விசயம். 1990-ஆம் ஆண்டு முதல் 1998 வரை ஏறக்குறைய முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கச் சுரங்க வேலையின் போது கானாவில் காணாமல் போய் இருக்கிறார்கள்.

கையடக்க பேசிகள் குப்பையில் தூக்கி எறியப்படுமாயின் அது மிகவும் ஆபத்தானது. அப்படி தூக்கி எறியப்படும் ஒரு கையடக்கப் பேசியானது பூமிக்குள் இருக்கும் நாப்பதாயிரம் கலன் நீரினை மாசுபடுத்தும் தன்மையைக் கொண்டதாகும்.

நமது இயற்கையை நாம் இன்னும் இவ்வளவு சூறையாடப்போகிறோம் என்பது தெரியவில்லை. புவி வெப்பம், நிலையில்லா வானிலை என அதீத மாற்றங்களில் நாம் பெரிதும் பாதிப்படைந்து வருக்கிறோம். ஆனால் அதை யாரும் பொருட்டாக கருதுவதில்லை. மறுசுழற்றி முறைகள் இவற்றில் இருந்து நம்மை சற்றே பாதுகாக்கும் என்பதில் ஐயம் இல்லை.
கையடக்க பேசிகளில் உலோகப் பொருட்கள் மட்டும் அடங்கி இருக்கவில்லை. மேலும் பல கலவைகளாலும் அவை செய்யப்பட்டிருக்கும். மறுசுழற்சி நடுவங்களில் அவற்றை குழு வாரியாக பிரித்து எடுப்பார்கள்.

உதாரணத்திற்கு இரப்பர் மற்றும் ஞெகிழி போன்றவை தனியாக சேமிக்கப்படும். பிறகு ஞெகிழிச் சுழற்சி நடுவத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவை சாலையோற கூம்புகள், உபரிபாகங்கள் போன்றவற்றை செய்ய பயன்படுத்திக் கொள்வார்கள்.

கையடக்கப் பேசியின் பிசிபி (PCB) எனப்படும் தட்டையான பகுதி பலவகையாக பிரித்தெடுக்கப்பட்டு தூளாக்கப்படும். அந்தத் தூள்களை மின் சுத்திகரிப்பு பகுதியில் உட்செலுத்தி தங்கத்தை பிரித்தெடுப்பார்கள். பிசிபி பகுதி அகற்றப்படும் போது சில தங்கம் பூசப்பட்ட பகுதிகள் சுலபமாகவே கிடைத்துவிடுவதும் உண்டு.

இறுதியாக தங்கம் மற்றும் இதற உலோகப் பொருட்களும் அதற்கு தகுந்த இடங்களில் விற்ன்பனை செய்யப்படும். இறுதி வேலையில் இருக்கும் பொருட்கள் தரம் அளக்கப்பட்டே வெளியாக்கப்படுகிறது. பொருட்களின் தரத்தை நிர்ணயம் செய்யும் வகையிலும் தற்சமயம் தொழில்நுட்ப சாதனங்களும் உண்டு.

உபயோகப்படுத்த முடியாமற் போகும் கையடக்க பேசிகளும் இனி பயன் தரும் என்பதை உணர்வோமாக.

சரி அப்படி மறுசுழற்சி செய்வதனால் நமக்கு என்ன நன்மை இருக்கிறது? விலை கொடுத்து வாங்கப்படும் கையடக்கப் பேசியை மறுசுழற்சிக்கு அனுப்பினால் எனக்கு சொற்பமான பணம் தானே கிடைக்கும் என நினைக்கலாம். ஆனால் அப்படி செய்யோமானால் ஏதோ ஒரு வகையில் இந்த இயற்கைக்கு நாம் நன்மை செய்ததாய் அமையும். வருங்காலத்தினருக்கும் அது பயனாக அமையும்.

மலேசியாவில் 'நோக்கிய கியோஸ்க்' (NOKIA KIOSK) எனும் தானியங்கி இயந்திரம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பழுதுபட்ட மற்றும் தேவையற்ற கையடக்கப் பேசிகளை இந்த இயந்திரத்தில் போட்டுவிடலாம். அப்படி போடப்படும் தொலைபேசிகளுக்கு பணம் கொடுக்கப்படாது. மாறாக நடுவதற்கு ஒரு செடி வழங்கப்படும். இது மரம் வளர்க்கும் திட்டத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சியாகும்.

தொழில்நுற்பம் வளர்ந்துவிடினும் இயற்கை பாதுகாப்பு மிகக் கட்டாயமானது. அதன் விழிப்புணர்வு மக்களிடையே பின்னடைந்து இருப்பது வருத்தமான செய்தியாகும்.

(பி.கு: 04.01.2009 தமிழ் ஓசை நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை)

()

Faviconஎல்லோருக்கும் கட்டாய கிராஸ் பெல்ட் ! 7 Jan 2009, 9:14 pm

சமீப காலமாக சாலையில் அளவுக்கு அதிகமான வாகனங்கள். எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டிருந்த சமயம் வாகன நெரிசல் குறைவாகவே இருந்தது. இப்போது அப்படி இல்லை. மக்களானவர்கள் தரமான(!?) பொதுவாகன சேவையை நாடுவதை குறைத்துள்ளார்கள் போலும்.

சில காலமாக எண்ணெய் விலை குறைப்பிற்காக மக்களின் போராட்ட குரல் அதிகரித்திருந்தது. இப்போது அது ஓரளவு அடங்கி இருக்கிறது. எண்ணெய் விலைக் குறைப்பினால் பலரும் சொந்த வாகனங்களை பயன்படுத்த எத்தனித்துள்ளார்கள்.

2009-ஆம் ஆண்டு 1-ஆம் திகதி முதல் மகிழுந்து உபயோகிப்போர் பின் இருக்கையில் அமர்பவராயினும் கவச பட்டை அணிவதை கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். தவறுபவர்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு பலமான விவாதத்திற்குள்ளானது. மக்களின் நலன் காக்க எடுக்கப்படும் முயற்சி என்பதால் இவ்வாண்டு இது அமலாக்கத்திற்கு வந்தது. ஆச்சரியம் என்னவென்றால் சமீப காலமாக மலேசியாவில் விபத்துகள் அதிகரித்திருக்கிறது.

காரணம் என்ன? வாகனமோட்டிகளின் மெத்தன போக்கே விபத்துக்கு காரணம் என கூறலாம். அவசர வாழ்க்கை. நேரத்தை துரத்தி துரத்தி தொய்ந்து போகும் நிலைக்குட்பட்டுவிட்டோம். சுவாசிப்பது, உணவு கொள்வது போலவே பயணமும் இன்றைய வாழ்க்கையில் அத்தியாவசியமாகிவிட்டது.

சில வேளைகளில் நேரத்தை மிச்சபடுத்தவும் அவசர வேலைகளுக்காகவும் சாலை விதிகளை மீறும் நிர்பந்தம் ஏற்படுகிறது. சாலை விதிகள் மக்களை சிரமப்படுத்த அல்ல என்பதையும் அவை நமது பாதுகாப்பிற்காகவே என்பதனையும் சில வேளைகளில் மறந்துவிடுகிறோம்.


சரி, பின் இருக்கையில் அமர்பவர்கள் கவசப்பட்டை அணிவதை கட்டாயமாக்கிய செய்திக்குத் திரும்புவோம். ஒரு குடும்பத்தில் நான்குக்கும் அதிகமான நபர்கள் இருப்பார்கள் என்றால் எல்லோராலும் கவசப்பட்டை அணிய முடியாது. அதற்காக தனியாக வாகனம் வாங்கும் அளவிற்கு எல்லோருக்கும் வசதி அமைந்துவிடவில்லை.

அப்படியென்றால் ஒரு வாகனத்தில் நான்கு அல்லது ஐந்து நபர்களுக்கு மேல் பயணித்தால் அதற்காக ஒரு அபராதமும் கவசப்பட்டை அணியாத குற்றத்திற்கு தனியாக இன்னொரு அபராதமும் விதிக்கப்படுமோ? பின்னிருக்கையில் அமர்வோர் பெரிய உருவமாக இருப்பின் கவசப்பட்டையை அணிய முடியுமா?

இது மக்களுக்குச் சுமை கூட்டும் விதி என்பதா இல்லை பாதுகாப்புக்கான முயற்சி என்பதா? சாலைவிபத்தில் சிக்கி பிழைத்தவனைக் கேட்டால் பின் இருக்கையில் கவசப்பட்டை அணிவது அவசியமானதே என்பான். சிக்காதவர் அவசியமில்லை என்றே சொல்வார்கள்.

வாகன விபத்துகளில் மரணமடைவோர்களின் எண்ணிக்கையில் அதிக எண்ணிக்கையிலானோர் கவசப் பட்டை அணியாதிருந்திருக்கிறார்கள் என அறிக்கைகள் தெரிவித்துள்ளன. கோர விபத்துக்களை தவிர்ப்பதற்கும் இம்முறை மிக அவசியமானதே என கருதுகிறேன்.

அடுத்ததாக பொதுச் சேவை வாகனங்கள் சிறந்த முறையில் இயங்குவதும் அவசியமாகும். சரியான நேரப்படி பொது வாகனங்கள் இயங்குமாயின் மக்கள் மாற்று போக்குவரத்துக்குக் கண்டிப்பாக அவற்றை பயன்படுத்திக் கொள்வார்கள். அதே போல் போது வாகன வசதிகள் போதுமானதாகவும் தரமாகவும் அமைதல் வேண்டும்.

பெயர் பலகைகள் புதிப்பிக்கப்பட்டும் அனைவரும் அறியும் மொழியிலும் எழுதப்பட்டால் பலருக்கும் நன்மை பயக்கும். ஆபத்து நிறைந்த சாலை பகுதிகள் சரிவர குறிப்பிடப்பட வேண்டும். வாகனமோட்டிகளுக்கு அது நினைவூட்டலாக அமையும்.

சாலைகளில் தனது ஆத்திர உணர்வையும் அவசரத்தையும் காட்டுவதனால் யாருக்கும் நன்மை இல்லை என்பதே உண்மை. தேய்வு உணர்ச்சிகளால் சாலையில் பாதிப்படைவது ஒரு சாரார் மட்டுமல்ல. காரணம் அறியாமல் பாதிப்படைவோரும் இருக்கவே செய்கிறார்கள். வாகனத்தைச் செலுத்தும் போதாவது நமது சுயநலச் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு அமர்வோமாக.

()

Faviconவான் துளிகள்!! 5 Jan 2009, 10:48 pm


தேங்கிய குப்பைகள்

திணறிக் கொண்டிருக்கிறது!

அடைத்துக் கொண்ட சாக்கடை

அழுது வடிகிறது!


ஈரப்பதம்

தேடிய காற்று

அலைமோதி

ஆசுவாசப்

பெருமூச்சிட்டுச் செல்கிறது!


வெள்ளிக்

காசுகளாய் குலுங்கி

கொட்டுகிறது

தலைதுவட்டிய

மரங்கள்!


தேன் கசிந்திட

திரவம் கிடைத்ததாய்

பூத்துச் சிரிக்கிறது

வசந்த மலர்கள்!


களிமண்

கரைந்திடாமல் இருக்க

குடைபிடித்துச் செல்கிறான்

மனிதன்!


இந்த

இயற்கை

தனக்குக் காய்சல்

வருவதாய் சொல்லவில்லை!


யாரைத் தேடி

வந்தன

இம்மழைத் துளிகள்!


மீண்டும்

தேடலை துவங்கிய

காற்றாய் வான் நோக்கிச்

செல்கின்றனவே!

()

Faviconஉள்(ள)விழிகள்! 5 Jan 2009, 12:34 am

தனியார்மயமாக்குதல், இது மலேசியாவில் பலரும் நன்கு அறிந்த விடயமே. அரசாங்கத்தின் பொறுப்பில் இருக்கும் நிறுவனங்களை அரசாங்கத்தின் பார்வையில் இருக்கும் படியாகவும் அதே சமயம் அவை தனியார் நிர்வாகத்தின் கீழ் செயல்படுப்படியாகவும் செய்யப்படுவதே தனியார்மயமாக்கம். தனியார்மயமாக்கப்பட்ட நிறுவனங்களின் பங்குகளின் பெரும்பகுதி தனியார் நிறுவனத்தின் உரிமம் பெற்றிருக்கும்.

சைம் டார்பி பெர்ஹாட் (Sime Darby Berhad) மலேசியாவின் பிரபலமான வல்லிய நிறுவனங்களுள் ஒன்று. இந்நிறுவனம் அரசாங்கத்தின் கண்கானிப்பில் இருக்கும் தேசிய இருதய கழகத்தின் பங்குகளை பெருவாரியாக வாங்கி அதைத் தன் வசமாக்கிக் கொள்ள எத்தனித்திருத்தது. தேசிய இருதய கழகம், Institute Jantung Negara அல்லது ஐ.ஜே.என் என அழைக்கபடும்.

தேசிய இருதய கழகத்தை தனியார்மயமாக்குவதில் அரசாங்கத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என அண்மையில் துணை பிரதமர் அறிவித்திருந்தார். பொது மக்களின் பார்வையைக் கருத்தில் கொண்டு தான் இப்படிபட்ட அறிக்கை வெளியாகியுள்ளதா என்பது சற்று யோசிக்க வேண்டிய விடயமாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற கூட்டம் முடிந்தது. கூட்டத்தின் பிறகு தேசிய இருதய கழகத்தின் தனியார்மயமாக்குதலின் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, தேசிய பொருளாதார இலாக்கா, நிதித் துறை, மற்றும் சுகாதார அமைச்சு என தனித் தனியே ஆய்வெடுக்கும் நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன.

பொது மக்களின் கருத்துக்கு அரசாங்கம் முக்கியதுவம் கொடுக்குமென துணை பிரதமர் அறிவித்திருக்கிறார். நாட்டு மக்களின் நலனில் அரசாங்கத்தின் சமூகவியல் சேவை பாதிப்படையாமல் இருக்கும் பொருட்டு இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மலேசிய முன்னால் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தேசிய இருதய கழகத்தைத் தோற்றுவித்தவராவார். பல தரப்பினரும் சிரமம் இல்லாமல் இருதய சிகிச்சையை மேற்கொள்ளும் பொருட்டு இக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அரசு சார்ந்த பல நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டமும் இவர் பிரதமராக பொறுப்பில் இருந்த போது ஆரம்பிக்கப்பட்டதே.

தற்சமயம் அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஆய்வறிக்கை முயற்சியினை பெரிதும் வரவேற்பதாக தமது http://chedet.com/ எனும் வலைப்பதிவினில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் கூறுகையில் தற்போதய இருதய கழகத்தின் நிர்வாகம் சிறப்பான முறையில் செயல்படுவதாகவும் அதில் மாற்றங்கள் ஏற்படுத்துவது அவசியமற்றது எனவும் கூறியுள்ளார்.

பொதுவாகவே நமது நாட்டில் வேண்டிய அளவிற்கு தனியார் மருத்துவமனைகள் சிறப்பாகவே செயற்பட்டு வருக்கின்றன. சொகுசு முறையில் மருத்துவம் செய்து கொள்பவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் நற்சேவையை வழங்கி வருக்கின்றன. அப்படி இருக்கையில் தேசிய இருதய கலகத்தை தனியார்மயமாக்குதல் தேவையற்றதே.

அரசாங்கம் மக்களுக்கு அதன் சேவையை தொடர்ந்து நன் முறையில் அளித்து வர நினைக்குமாயின் தனியார்மயமாக்குதலை தவிர்க்கும் என நம்புவோமாக. தற்சமயம் முழுவதுமாக அரசாங்க பொறுப்பின் கீழ் இருக்கும் தேசிய இருதய கழகம் தனியார்மயமாக்கும் அளவிற்கு குறைபாடுகள் கண்டுள்ளதாக நமக்கு தெரியவில்லை.

தனியார்மயமாக்கப்பட்டால் சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைக்கான கட்டணங்கள் உயரச் செய்யும். இதனால் இருதய கழகத்தின் நற்சேவை பலருக்கும் சென்றடையாமல் போக வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதே பலரின் பொதுவான கருத்தாக இருக்கிறது.

தனியார்மயமாக்கப்பட்டால் தரமான சேவையை நாம் எதிர்ப்பார்க்க முடியும் என்பது அரசியல் தரப்பின் வாதமாக இருக்கிறது. தற்சமயம் ஒரு நோயாளிக்கான சிகிச்சைக் காலம் அதிகமாக இருந்தாலும் அது பண வசதி குறைந்தவர்களும் சிகிச்சை எடுத்துக் கொள்ள ஏதுவாக அமைகிறது.

இப்போதய நிலைக்கு தேசிய இருதய கழகம் பாகுபாடின்றி அதன் சேவையை அனைவருக்கும் வழங்கி வருகிறது. இங்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் மக்களில் பெருவாரியானவர்கள் அரசாங்க வேலையில் இருப்பவர்களாகவும், வேலை ஓய்வு பெற்றவர்களாகவும், பண வசதி குறைந்தவர்களாகவும் இருப்பதாக ஆய்வுகள் குறிக்கின்றன. பண வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களாகவும், தேசிய இருதய கழகத்தின் உதவியை அவர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதனையே குறிக்கிறது.

தேசிய இருதய கழகம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பு அதிகமான மலேசியர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். பலரும் சிகிச்சையை மேற்கொள்ள சிங்கைக்குச் செல்ல வேண்டி இருந்தது. ஒரு வேளை தேசிய இருதய கழகம் தனியார்மயமாக்கப்படுமானால் மக்களின் நம்பிக்கை பெறுவதற்காக விலை ஏற்றப்படாதது போல் இருக்கலாம். ஓரிரு ஆண்டுகளுக்குப் பின் நிர்வாக கட்டணம் உயர்வதாக கூறி உயர்த்தப்படலாம். இதனால் பொதுமக்கள் பாதிப்படையலாம்.

தனியார்மயமாக்கம் சிறந்த சேவைக்கு வழிவகுக்கிறது என்பது மறுக்க முடியாததே. தேசிய மின்சார வாரியம், டெலிக்கோம் மலேசியா போன்ற நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டது. அதன் சேவை தரம்(!?) உயர்ந்துள்ளதை போலவே கட்டணமும் உயர்ந்துக் கொண்டே போகிறது.

தரமான அரசாங்கத்தால் மக்களின் தேவையை சிறந்த முறையில் பூர்த்தி செய்ய முடியும் என்பதினை நம்புவோம்.

()

Faviconகொசுறு 26/12/2008 26 Dec 2008, 4:32 am

இன்றய தினம் ஆழிப் பேரலையில் (சுனாமியில்) இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு சாணியடி சித்தர் 'பிசி'யாக இருப்பதால் இவ்வார சித்தர் தத்துவத்திற்கு சிறப்பு விடுமுறை கொடுக்கப்பட்டிருக்கிறது. சுனாமியில் இறந்தவர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலி.
************************

நேற்றய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை இனிதே கொண்டாடிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். சேவியர் அண்ணுக்கும் ஜோசப் அண்ணனுக்கும் சிறப்பு வாழ்த்துகள். சிறப்பு வாழ்த்து சொல்பவர்களுக்குச் சிறப்பு பரிசு கொடுப்பதாக இருவரும் சொல்லி இருக்காங்க.
*******

டைரி எழுதுவதை ஓர் அருங்கலையாகக் கருதுகிறார்கள். இப்பழக்கம் வெள்ளையர்களிடம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. நமது அரசர்களின் கல் வெட்டுகள் கூட அவர்களின் டைரி என்பதாகவே எனக்குக் கருத தோன்றுகிறது. ஆரம்பக் காலங்களில் மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் போன்றோர் டைரி குறிப்பு எழுதுவதை பழக்கமாக்கி வைத்திருந்தார்கள். பின்னாட்களில் அரசியல்வாதிகள், பேச்சாளர்கள், சிறைக் கைதிகள் போன்றோர் எழுதிய நாட்குறிப்புகள் பிரசித்தி பெற்றும் இருக்கிறது. இந்நாட்களில் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் மக்களிடையேக் குறைந்து காணப்படுகிறது.

பள்ளி காலத்தில் என் நண்பனொருவன் நாட்குறிப்பு எழுதி வந்தான். ஒரு நாள் அக்குறிப்பு அவன் அப்பா கையில் கிடைக்கவும், பையன் மறுநாள் பள்ளிக்கு சின்னாபின்னமாகி வந்தான். ஏன் எனக் கேட்கிறீர்களா? அவனது நாட்குறிப்பில் நாள் ஒன்றுக்கு எத்தனை சிகரெட் பிடித்தான், எங்கே யாருடன் பிடித்தான் என்பதை தெளிவாக எழுதியது தான் காரணம்.

வருட ஆரம்பத்தில் பலருக்கும் டைரி பரிசாக கிடைத்திருக்கும். எனக்கு இது வரை 5 டைரிகள் கிடைத்திருக்கின்றன. நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இல்லை. இந்நாள் வரை டைரிகளில் கவிதைகளை மட்டுமே நிரப்பி வருகிறேன்.
**********

தமிழ்மணத்தின் விருதுகள் 2008 ஆரம்பமாகியுள்ளது. பதிவர்கள் பலரும் தங்களின் படைப்புகளில் சிறந்த பதிவினை பரிந்துரைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். மின்னூடகத்தை அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்திட அவர்களின் இம்முயற்சி பாரட்டதக்கது. நானும் எனது பதிவுகள் சிலவற்றை பரிந்துரை செய்துள்ளேன். மறவாமல் ஓட்டு போடவும்.
*********

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் உலகில் ஆங்கங்கு பிரச்சனைகள் துளிர்ப்பதை தினமும் பார்க்க முடிகிறது. இந்தியா பாக்கிஸ்தான் போர் இப்போதோ இல்லை அப்போதோ என வெடிக்கும் தருவாயில் இருக்கிறது.

இந்நிலையில் ஏ.எஃப்.பி தளத்தில் சமீபத்தில் படித்த தகவல் ஒன்று. அரசியல் பிரச்சனையால் பாங்காக்கில் பாலியல் தொழில் படு மோசமாக வீழ்ச்சி கண்டுள்ளதாம். 50% கழிவு கொடுத்திருப்பினும் மக்கள் ஆர்வம் காட்டாததால் பல பாலியல் வியாபார மையங்கள் பலவும் பாயை சுருட்ட ஆரம்பித்துவிட்டனவாம். தாய்லாந்துக்கு சுற்றுபயணிகளின் வருகையும் கணிசமான அளவில் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
*****

திரைப்படம் பார்த்து வெகு நாட்களாகிறது. சமீப காலமாக ஈப்போ பக்கம் எந்தத் தமிழ்ப் படமும் திரைக் காண்பதில்லை. பொம்மலாட்டம் படம் இரசிக்கும்படி இருப்பதாக கேள்விப்பட்டேன். திரையரங்கில் காண முடியவில்லை என்றாலும் இணையத்தில் பார்க்கலாம் என நினைத்தேன். 'ப்ஃபர்' செய்து வருவதற்குள் தாவு தீர்ந்ததால் அதை பார்க்காமல் இருப்பதே மேல் என நினைத்து அடைத்துப் போட்டேன்.
*****

அறிவால் செய்து முடிக்கும்
அற்பச் செயலையுங் கூட
அரிவாள் கொண்டு
செய்து முடிக்கும்
அற்புத ஓரினம்
அருமைத் தமிழினம்!
****

இனி இவ்வாண்டு கொசுறு எழுதுவதில்லை எனும் முடிவோடு விடைபெறுகிறேன். நன்றி.

Faviconகாடுகளை அழிக்கும் ரப்பர் 22 Dec 2008, 8:59 pm

யூனான் 'Yunnan' சீன தேசத்தில் அறியப்பட்ட ஓர் இடம். நாளுக்கு நாள் இங்கு காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான காரணம் யாது? முடிச்சுகளை அவிழ்த்துக் காண்கையில் இப்போது இக்கட்டுரையை படிக்கும் நீங்களும் நானும் கூட அதில் சம்பந்தப்பட்டிருப்போம்.

யூனான் பகுதியில் தாழ்ந்த நிலபரப்பில் அமைந்திருந்த காடுகள் பரவலாக அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது காணுமிடமெங்கும் ரப்பர் மரங்கள் நடப்பட்டுள்ளன. இடங்கள் போதாமல் மேடான பகுதிகளும் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது. அவ்விடங்களிலும் இரப்பர் மரங்களை நடுவதற்கான ஏற்பாடுகள் நடந்த வண்ணம் இருக்கிறது.

சீன தேசத்தில் உந்துகளின் வட்டை(Tyre) உற்பத்தி அதிகரித்து வருகிறது. சீன தேசத்துப் பொருட்களுக்கு செல்வாக்கு அதிகம். அதற்கு காரணம் மலிவான முறையில் விற்பனை காணும் பொருட்கள். வெளிநாட்டிளும் உள்நாட்டிளும் வட்டைக்கான கோரிக்கை அதிகரித்துள்ளது. போதாமையின் காரணமாக யூனான் காடுகள் அழிக்கப்பட்டு அங்கு இரப்பர் மரங்கள் நடப்பட்டு வருகிறது.

சிசுவாங் பன்னா 'Xishuang-banna', யூனானில் அமைந்துள்ள ஒரு வட்டாரமாகும். இவ்வட்டாரத்தின் காட்டுப்பகுதிகளில் பலதரபட்ட விலங்குகளும் தாவரங்களும் உள்ளன. ரப்பர் வேளான்மையின் அதீத வேகத்தால் இவை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் 'சிசுவாங் பன்னா' பகுதியில் 70 விழுக்காடு காடுகளும், மலைகளும் நிறைந்திருந்தது. சிசுவாங் பன்னா சீனா மற்றும் மியன்மார் தேசத்தின் எல்லையில் உள்ளது. இன்றைய நிலையில் 50 விழுக்காடு காடுகள் அப்பகுதியில் அழிக்கப்பட்டுவிட்டன.

ஒர் அதிகாரப்படி செய்தியில் யூனான் பகுதியில் மட்டும் 334,000 எக்டர் பரப்பளவில் ரப்பர் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இது சீனவில் இருக்கும் மொத்த ரப்பர் வேளான் பகுதிகளில் 43 விழுக்காடாகும்.

2007-ஆம் ஆண்டு மட்டுமே சீன தேசத்தில் 2.35 டன் இரப்பர் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து சுமார் 70 விழுக்காடு இரப்பர் சீனாவால் வாங்கப்பட்டிருக்கிறது.

உள்நாட்டு வட்டை தயாரிப்பிற்காகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் அதிகமான கோரிக்கைகள் ஏற்பட்டது. இது ஒரு புரம் அவர்களுக்கு மகிழ்ச்சியான விசயமாக அமைந்தாலும் ரப்பர் உற்பத்திக்காக மெற்கொண்டுள்ள முயற்சிகள் அவர்கள் நாட்டின் இயற்கைக்கு பாதகமாகவே அமைந்துள்ளது.

2007-ஆம் ஆண்டு 330கோடி வட்டைகள் சீனாவில் உருவாக்கப்பட்டது. அதில் 50 விழுக்காடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. குட் இயர் (GoodYear), கண்டினென்டல் ஏ.ஜி மைக்ஹெலின் (Continental AG Michelin), பிரிட்ஜ் ஸ்டோன் (Bridgestone) போன்ற உலகப் புகழ் பெற்ற வட்டை நிருவனங்களும் கூட தங்களது உற்பத்தியை சீனாவில் தொடங்க திட்டமிட்டுள்ளன. இதற்கு காரணம் மலிவான உற்பத்தி மட்டுமல்ல. அதிகமாக லாபம் ஈட்டும் நோக்கமும் தான்.

இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கில் சீனா தனது இரப்பர் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டை இலக்காக கொண்டு தமது உற்பத்தியை 30 விழுக்காடாக அதாவது 780 000 டன் அதிகரிக்க முயற்சிப்பதாக சீன இரப்பர் உற்பத்தி இயக்கம்(China Rubber Industry Association) தெரிவித்துள்ளது.

இருப்பினும் ரப்பரின் உற்பத்திக்கு உகந்த நிலப் பகுதி தென் சீனாவில் அமைந்திரிக்கும் யூனான் போன்ற இடத்தில் மட்டுமே இருக்கிறது. இது அவர்களுக்கு பெறுத்த ஏமாற்றமே. கிடைத்த சிறு பகுதி நிலத்தையும் முடிந்த அளவு பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள்.

1967-ஆம் ஆண்டு முதல் 2003-ஆம் ஆண்டு வரை 67 விழுக்காடு மழைக் காடக வனப்பகுதிகள் ரப்பர் உற்பத்திக்காக அழிக்கப்பட்டிருக்கின்றன. யூனான் பகுதிகளில் இயங்கிவரும் ரப்பர் உற்பத்தியாளர்களே காடுகளின் அழிவிற்கு பொறுப்பாளிகள் என்பதனை ஒரு ஆய்வு நிருவணம் வெளியிட்டது.

யூனான் நேச்சுரல் ரப்பர் இண்டாஸ்டிரியல் (Yunnan Natural Rubber Industrial) அப்பகுதியில் இயங்கி வரும் மிகப் பெரிய இரப்பர் உற்பத்தியாளர்கள். ஆய்வு நிருவனத்தின் அறிக்கையை மறுக்கும் இவர்கள் ரப்பர் உற்பத்தியை வேளான் நிலத்திலும் மற்றும் அரசு இசைவுப் பெற்ற நிலப்பகுதிகளில் மட்டுமே மேற்கொள்வதாக அறிவிக்கிறார்கள்.

சீனாவில் வளர்ந்து வரும் பல ரப்பர் நிருவணங்கள் வெளிநாடுகளிலும் ரப்பர் தோட்டங்களை உருவாக்கி தங்கள் உற்பத்தியை அதிகரிக்க வழி கண்டு வருகின்றன.சமீபத்தில் மியன்மாரில் 1333 எக்டர் பரப்பளவில் இரப்பர் தோட்டம் ஒன்றை சீன நிருவணம் நிருவியுள்ளது. இதன் பயன்பாட்டை இன்னும் ஆறு அல்லது ஏழு வருடங்களில் அவர்கள் அனுபவிக்க முடியும்.

தற்சமயம் அப்பகுதிகளில் பரவலான முறையில் போப்பி மரங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில காலங்களில் அவற்றுக்கு மாற்று பயிராக ரப்பரை பயிர் செய்யவும், 1333 எக்டர் பகுதியை 33,333 எக்டராக விரிவுபடுத்தவும் அந்நிருவணம் திட்டமிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ரப்பரின் விலை உயர்வு யாவரும் அறிந்ததே. அதைக் காரணமாகக் கொண்டு இயற்கையை பாழ்படுத்துவது வருந்ததக்க மற்றும் கண்டிக்கதக்கச் செயலாகும். இன்றைய பொருளாதார பாதிப்பில் ரப்பரின் விலை சுனக்கம் கண்டுள்ளது. இதனை சீனா மேற்கொள்ளப் போகும் யுக்தியை பொருத்திருந்து காண்போமாக.

(பி.கு: 21.12.2008 தமிழ் ஓசை நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை)

()

Faviconசாண்டில்யனின் - விலை ராணி 21 Dec 2008, 9:55 pm

நூல்: விலை ராணி
ஆசிரியர்: சாண்டில்யன்

நயம்: சரித்திர நாவல்
வெளியீடு: வானதி பதிப்பகம்

சந்திரகுப்த மௌரியரின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கும் நாவல் விலை ராணி. நாவலின் பெரும்பகுதி மௌரிய பேரரசின் விரிவாக்கத்திற்காக சந்திரகுப்தன் மெற்கொண்ட போர் காலகட்டத்தில் கதை நகர்த்தப்படுகிறது. சாண்டில்யனின் மற்ற நாவல்களை காட்டினும் இந்நாவலில் அவரின் எழுத்து நடை முற்றிலும் பல வேறுபாடுகளைக் கொண்டு அமைந்துள்ளது. தேக்கம் இல்லாத விறுவிறுப்பான நடை. அடுத்தடுத்த கட்டங்களுக்கு சட்டென பாய்ந்து செல்லும் முறையும் படிப்பவரின் ஆவலை ஆட்கொள்கிறது.

மன்னன் மகள் நாவலில் கௌடில்யரின் அர்த்த சாஸ்திர முறையிலான போர் தந்திரங்கள் பரவலாக விவரிக்கப்பட்டிருக்கும். விலை ராணியில் அர்த்த சாஸ்திரியான சாணக்கியரைப் பற்றிய வரலாறும் இணைக்கப்பட்டிருப்பது கதைக்கு பெரும் பலம்.

கிரேக்க சாம்ராஜ்யாதிபதி அலேக்செண்டரால் விட்டுச்செல்லப்பட்ட பாரத நாட்டினை கண்முன் கொண்டு வரும் யுக்தியும் மிகச் சிறப்பு. வீரகுப்தன், விலைராணி பிரபாவதி தேவி, ஆண்டரி போன்ற கற்பனை கதாபாத்திரங்கள் நாவலுக்கு வலு சேர்க்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

விலை ராணி எதனால் உருவாகிறாள்? தட்சஷீலத்தில் பெண்களை விற்பனை செய்யும் சந்தை ஒன்று அக்காலகட்டத்தில் இருந்ததிற்கான சரித்திர கூறுகள் ஊண்டு. அதை மக்களிடம் தெரிவிப்பதையும் கருத்தில் கொண்டு ஆசிரியர் செயல்பட்டிருக்கிறார். அப்படி விற்பனை செய்யப்படும் பெண்களை பல நாட்டவரும் வாங்கிச் செல்கிறார்கள். வாங்கிச் செல்லப்படும் பெண்கள் அடிமைகளாகவும், மனைவியாகவும் உரிமையாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரசியல் நோக்கத்திற்காக திருமணச் சந்தையில் தன்னை விற்பனை பொருளாக்கிக் கொள்கிறாள் விலை ராணி. இக்கதையில் வீரகுப்தனும், சந்திரகுப்தனும் நாயகர்களாக காட்டப்படுகிறார்கள். ஆனால் அதன் பின்னனியில் பெரும் தூண்டுகோளாக செயல்படுகிறார் சாணக்கியர்.

பாடலீபுத்ர நாட்டின் மீது கொள்ளும் படையெடுப்பே இந்நாவலின் உச்சகட்டமாக அமைகிறது. அது போக சாணக்கியரின் சபதம் சுய இலாபத்தின் பேரில் அமைந்துவிடுவதாகவும் எண்ணச் செய்கிறது. ஆபத்து சூழ்ந்த வேளையிலும் விலை ராணியோடு காம இச்சை கொள்வதை போல் சித்தரிக்கப்படும் வீரகுப்தனின் போக்கு அதிகபடியானதே.

காதல், நட்பு, சகோதர பாசம், அரச விசுவாசம், சாணக்கிய தந்திரம் என பலவற்றையும் கொண்டு இந்நாவல் அலசப்பட்டிருக்கிறது. மௌரிய பேரரசின் வெற்றிக்கு சாணக்கிய தந்திரமே வித்தாக அமைந்துள்ளது என்பதை ஆசிரியர் முன்மொழிகிறார். இந்நாவல் சந்திரகுப்த மௌரியரின் இளமை கால வாழ்க்கையை அறியாதவர்களுக்கு அதை முழுமையாக உணர வைக்கும்.

()

Faviconகொசுறு 17/12/2008 17 Dec 2008, 1:58 am

இந்த ஆண்டு இதையெல்லாம் செய்ய முடியலை என சொல்வது 'நெகடிவ் அப்ரோச்' அடுத்த ஆண்டு இதையெல்லாம் செய்துவிடுவேன் என சொல்வது 'பாசிடிவ் அப்ரோச்' என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.
****

ஆட்களை காட்டுபவர் என பெயரிட்ட பதிவர் ஒருவர் தற்சமயம் சிங்கையில் இருக்கிறார். மலேசியா வாந்தால் சொல்லுங்கள் சந்திக்கலாம் என்றேன். சந்திக்கலாம் போட்டோ எடுக்காதீர்கள் என்றார். ஏன் என்றேன். 'என் பொண்டாட்டி மூழுகாம இருக்கா, உன் பொண்டாட்டி என்னவா இருக்கா' என்ற சண்டைகள் விளையாமல் இருக்க போட்டோவை தவிர்ப்பது நன்று என்றார்.
****

பல பதிவர்களையும் இணைத்து கதை எழுதிய இவர், நெருங்கிய தொடர்பிலிருக்கும் என்னை மறந்துவிட்டார். இருக்கட்டும் பார்த்துக் கொள்கிறேன்.
****

பெர்னாட்ஷா உலக அறிஞர்களுள் ஒருவர். பரவலாக புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்ட இவர் ஆழ்ந்து கற்று தேறியது இரண்டே நூல்கள் தான். ஒன்று பைபில் இன்னொன்று ஷெக்ஸ்பியர் இலக்கியம்.
****

அண்மையில் தமிழ்மணத்தில் நடந்தேறிய தடல்புடல் சண்டைக்கு குரு பெயர்ச்சி காரணமா? தீவிர ஆலோசனைகள் நடந்தேறுகிறது.
****

சோ சொன்னது, நான் தம்பிகளுக்கெல்லாம் அண்ணன், அண்ணன்களுக்கெல்லாம் தம்பி, எப்படி முன்னால் பிறப்பவன் அண்ணன்,பின்னால் பிறப்பவன் தம்பி -எப்படி தத்துவம்?
****

புத்தகங்கள் எக்கச் செக்கமாக சேர்ந்துவிட்டது. படித்து முடித்துவிட்டு வாங்கிக் கொள்ளலாம் என்றே நினைக்கிறேன். ஆனால் சில சமயங்களில் புத்தகக் கடை பக்கம் போகும் வேலைகளில் கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் எதையாவது தேடி பிடித்து வாங்கிவிடுகிறேன்.
*****

ஞாயிற்றுக் கிழமை 14/12/2008 திரு.கோவி அவர்கள் சிகை அலங்காரம் செய்துள்ளார் மற்றும் வீட்டில் முருங்கைக்காய் சாம்பார் அவரே சமைத்துள்ளார். ரம்பா வீட்டில் நாய் குட்டி வாங்கிய செய்திகளையெல்லாம் நாளிகையில் போடுகிறார்கள். கோவியாரை பற்றிய இச்செய்தி மிகையில்லை என்றே கருதுகிறேன்.
*****

இவ்வருடம் வலைப்பதிவில் விடுபடாமல் தொடர்ந்து எழுதுகிறேன். பத்திரிக்கையில் எழுதும் வாய்ப்பும் அமைந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.
****

இந்த சுட்டி அருண் (தமிழ் சினிமா டாட் கோம்) திருந்துவதாக தெரியவில்லை. நேற்றுவரை அவருடைய விளம்பர பின்னூட்டம் வந்துக் கொண்டே இருந்தது. சொல்லியும் கேட்காத இவர்களை என்னதான் திட்டுவது என்றே தெரியவில்லை.
****

இவள் என்ன கண்ணகியோ?
ஒரு முறை உரசியதற்கே
பற்றி எரிகிறாள்
மானமுள்ள தீக்குச்சி. -அன்புடன் மடற்குழுமத்தில் சங்கர் எழுதியது.
******

சமீபத்தில் முடிவிலான் எழுத்துக்கள் பக்கத்தில் படித்த அனந்தனின் சிறுகதை கவரும் வண்ணம் இருந்தது. வினாக்களோடு சில கனாக்கள் எனும் அக்கதையில் வரும் ஒரு உரையாடல். நல்ல நகைச்சுவை.

"மறவ், இங்கே பாரேன். இந்த போட்டோல இருப்பது யாருன்னு சொல்லு,"என்றாள்.

வழியில் செல்லும் ஓணானை மடியில் கட்டாமல் விட மாட்டாள் போலிருக்கே. அசடாய் சிரித்துக் கொண்டு,

"உங்கப்பாவோட சிறு வயது போட்டோவா? நல்லா இருக்காரு"

"ஷீட்... கெக்கபுக்க கெக்கபுக்க"சிரித்தாள்
.
*******

சமீபத்தில் , 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை' எனும் கண்ணதாசன் பாடலைக் கேட்டேன். அதில் வரும் சில வரிகள்:

முதல் வரி:
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை; மனிதன் மாறிவிட்டான்!

அடுத்த வரி:
கையளவுதானே இதயம் வைத்தான்
கடல்போல அதில் ஆசை வைத்தான்
மெய்யும் பொய்யும் கலந்துவைத்தான் - அதில்
மானிடர் தர்மத்தை மறைத்து வைத்தான் - ஏனோ
மனிதன் மாறவில்லை - அவன்
மயக்கம் தீரவில்லை

மனிதன் மாறிவிட்டானா? மாறவில்லையா?
மாறியும் இருக்கிறான் மாறாமலும் இருக்கிறானா?

Faviconஇறைவனுக்கு ஒரு கடிதம்!! 15 Dec 2008, 8:53 pm

இறைவனுக்கு வணக்கம்,

நீ எதையும் கண்டு கொள்ளாமல் இருமாப்புடன்தான் இருக்கிறாய். இந்த ஆறறிவு அறிவு ஜீவிகளை நினைக்கையில் தான் பெருமிதமாக இருக்கிறது. உன் பெயரைச் சொல்லிக்கொண்டு அடிதடியில் இறங்கிவிடுகிறார்கள். என்னைக் கேட்டால் உலகில் மிகப்பெரிய வன்முறைக் கும்பல் தலைவன் நீ தான் என்பேன். ஏன் என்று கேட்கிறாயா? மௌனத்தை துணை கொண்டு சாதனை செய்பவன் அல்லவா நீ! அதுதான் காரணம்.

ஒரு கிழவனைக் கண்டேன். அவனுக்கு 80 வயதுக்குமேல் இருக்க வேண்டும். நினைவு தெரிந்த நாளில் இருந்து உன்னை வழிபடுகிறானாம். ஏன் என்றேன். நீ நல்லது செய்வாய் என்ற நம்பிக்கை என்றான். பார், தன் மேல் இருக்கும்
நம்பிக்கையைவிட உன் மேல் தான் அதிக நம்பிக்கை வைத்துள்ளது மனித குலம். அந்த மனிதனின் விசுவாசத்திற்கு நீ பதில் சொல்வாயா? இங்குள்ள சிலர் அவனுக்கு பதில் சொன்னார்கள். அவன் மடையன் என்று. ஆனால் அவனுக்கோ இன்னமும் அந்த பதிலில் திருப்திதான் இல்லை.

உனது பக்தர்கள் தன் சக மனிதனுக்கு உதவுவதைவிட உன்னிடத்தில்தான் கொட்டிக் கொடுக்கிறார்கள். பிரச்சனைகளையும், சம்பாதிக்கும் செல்வங்களையும் சமபங்கில். மடிந்து போகும் மனிதனுக்கு மண்டையில் மயிர் இருக்கும் அளவிற்கு மதி நுட்பம் இருப்பதில்லை. கோடிக்கணக்கில் தானம் செய்து உனக்கு கோவில் கட்டுகிறான். தெருக்கோடியில் நிற்கும் அனாதையை மறந்துவிடுகிறான்.

"அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு"
குறள் எண்: 80
அன்புடமை (இல்லறவியல்)

என்று வள்ளுவர் சொல்கிறார். ஆனால் இங்கோ நிலைமை அப்படி இருக்கவில்லை. நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் சவரம் செய்த தாடியைப் போல் சடசடவென வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒன்று போனால் இன்னொன்று என்பது போல் புதிது புதிதாக குற்றச் செயல்கள்.

''பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்''
-அருள் பிரார்த்தனை

என வள்ளலார் தமது அருள் பிரார்த்தனையில் சொல்கிறார். இங்கோ உனக்கு ஏகப்பட்ட மதங்கள். மனிதனுக்கு தொண்டு செய்ய மதம் இருப்பின் பழுதில்லை. இங்கோ உனக்கு தொண்டு செய்ய மதங்கள் இருக்கிறது. உனக்கு நகை அணிவிக்க வேண்டும் என்கிறான், சட்டை போட வேண்டும் என்கிறான், தூக்கி வைத்துக் கொண்டு ஊர்வலம் போக வேண்டும் என்கிறான். நீயே சொல் இறைவா, நீ என்ன முடமா? முடமாய் கிடப்பவனுக்கு கூட இந்த மனிதர்கள் இவ்வளவு சேவை செய்வதில்லை போ.

என் இறைவனே,

உயரிய இடத்தில் இருக்க வேண்டிய உன் உணர்வு சந்தைக் கடை, சாக்கடை என படி இறக்கம் கொண்டே போகிறது. இதற்கு காரணம் நீயா இல்லை இந்த மனிதர்கள் தானா என்பது தெரியவில்லை. எல்லாம் இறைவன் செயல் என்றும் சொல்கிறார்கள், சில வேளைகளில் மனிதனின் அறியாமை என்றும் சொல்கிறார்கள். இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்கிறார்கள். அப்படிப்பட்ட இறை தன்னுள்ளும் இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க மறுக்கிறார்கள்.

உன்னை கோவிலில் சிலையாக வைத்து வழிபடுகிறார்கள். நீ தூரத்தில் இருக்க வேண்டியவன் தானா? அப்படி உன்னை சிலையாக வழிபடுபவர்கள் கூட அந்த சிலையை அணுக பல தடைகள். இதற்கு யாரை நீ குறை சொல்ல போகிறாய்? நான் கேட்பது ஒன்று தான் என் நண்பனாக எனக்குள்ளே என்னோடு இரு என் மனசாட்சியாக, நன்நெறி போதகனாக, சூது அறியச் செய்பவனாக. நீ உச்சத்தில் இருக்கவும் வேண்டாம், தாழ்ந்திருக்கவும் வேண்டாம்.

''ஆதித் தமிழன் ஆண்டவனானான் மீதி தமிழன் அடிமைகளானான்'' என்கிறார்கள். பக்தர் எனும் பேரில் நான் உன் அடிமையாய் இருக்க விருப்பம் கொள்ளவில்லை. எதற்கு இந்த உயர்வு தாழ்வு நிலை. அதை உருவாக்கியவனும் நீதானா?

மனிதன் தவறு செய்கிறான். தவறுக்கு தண்டனை பெறுகிறான். தெய்வம் தண்டித்தது என்கிறார்கள். தண்டித்தது நீயானால் தவறு செய்ததும் நீயே. எதனால் இந்த கபட நாடகம்.

நீ இன்று கவிஞர்களின் விளையாட்டுப் பொருளாகிவிட்டாய்.

இல்லாத
இறைவன் போல்
இடைகொண்ட பெண்னே!

என்கிறான் ஒரு கவிஞன். பாடலில் தான் இப்படி என்றால் திரைபடங்களிலும் அப்படி தான். உன் பெயரால் மனிதனுக்கு மதம் பிடித்துவிட்டது. மாற்றான் மதம் பிடிக்காமல் போய்விட்டது. மதமில்லாமல் உன்னைக் காண இங்கு பலருக்கும் விருப்பமில்லை.

பிரச்சனைகள் இருந்தால் தான் கடவுளை நினைப்பார்கள் என்கிறான் ஒருவன். நினைப்பது நீதியாக இருந்தாலும் பரவாயில்லை. பிரச்சனைகளை தீர்க்கும் பேரில் உனக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. லஞ்சம் கொடுத்தால் தான் நீ உதவுவாய் என்று கூறி பஞ்சம் பிழைக்கிறது ஒரு கூட்டம். இப்படிபட்ட பார்வையில் நீ இந்த பூமியில் அவசியம் தானா என்று சொல்?

பேச எவ்வளவோ தோன்றுகிறது. இப்போதைக்கு இது போதும். தவறுகள் நேரும் போது இன்னும் கடிதங்கள் எழுதுவேன். உன்பேரில் என்னை நான் கேள்விகள் கேட்டுக் கொள்ள.

Faviconமலேசிய தமிழ்ப் பதிவர் சந்திப்பு அனுபவமும் சில குறிப்புகளும்!! 14 Dec 2008, 8:29 pm

ஞாயிற்றுக் கிழமை. பலரும் சோம்பல் முறிக்கும் நாளாதலால் சாலையில் அதிகமான வாகனங்கள் இல்லை. கோலாலம்பூருக்கான பயணம் துரிதமாக அமைந்தது. காலை 11.30க்குள் கோலாலம்பூரை அடைந்துவிட்டேன். பத்து நிமிடத்தில் முரளி வருவதாக கூறினார். அவருக்காக காத்திருந்தேன்.

பல வண்ண பட்சிகள். ஹம்ம்ம் நிம்மதியாக கண்களுக்கு விருந்தளிக்க முடியாத குறை. பேருந்துச் சீட்டு வியாபாரிகளின் தொல்லை ஒரு பக்கம். விட்டால் வந்த பேருந்திலேயே மறுபடியும் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் போல. பாவம் அவர்களுக்கு என்ன தெரியும், வந்திறங்கியவனா இல்லை கிளம்பி போகிறவனா என்று. வயிற்று பிழைப்புக்காக கத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு இடமாக நின்றுக் கொண்டிருந்தேன். ஒருவன் அருகில் வந்தான்.

"அண்ணே எங்க போகனும் சொல்லுங்க 'டிக்கட்' எடுத்து கொடுக்கிறேன்" என்றான்.

நான் ஒன்றும் பேசாமல் இருந்தேன்.விட்டால் நீ என்னை எமலோகத்துக்கே அனுப்பி வைத்துவிடுவாய் என்று மட்டும் நினைத்துக் கொண்டேன். போதை பித்தன் போல. அழுக்கு பிடித்து போன மேனி. (சித்தர்கள் கூட இப்படி தான் இருப்பாங்களாம் உண்மையா? :P).

"ரொம்ப கஷ்டமா இருக்குண்ணே. பத்து வெள்ளி இருந்தா கொடுங்க சாப்பிடனும் என்றான்".

கைகால் திடமாக தானே இருக்கு இவர்களுக்கு. உழைத்து உண்ண வலிக்கிறது. நிம்மதியாக மனிதன் ஒர் இடத்தில் நிற்கக் கூட முடியவில்லை. அவனைப் போலவே பலரும் அங்கே திரிகிறார்கள். மக்கள் நடமாடும் இடத்தில் இப்படிபட்டவர்கள் திரிவது எவ்வளவு ஆபத்து. 'புடு ராயா' பகுதியில் திருட்டு மற்றும் போதை பித்தர்கள் பிரச்சனை பலகாலமாக அறியப்பட்டது தான். இவற்றைக் களைய அரசாங்கம் ஏதும் திட்டங்கள் மேற்கொண்டதா என்பதும் கேள்விக்குறியே. அவனிடம் பேச்சு கொடுக்காமல் வேறு இடமாகச் சென்று நின்று கொண்டிருந்தேன்.

நண்பர் முரளி வந்தவுடன், முடிவிலான் எழுத்துக்கள் பதிவர் நண்பன் அனந்தனை தொடர்பு கொண்டேன். அவரின் தகவலின்படி இன்னும் 30 நிமிடங்களில் கோலாலம்பூரை அடைந்துவிடுவார் என அறிந்தோம். அனந்தன் பினாங்கில் வசிக்கும் பதிவர். அவர் வருகைக்குக் காத்திருந்த இடைப்பட்ட நேரத்தில் மனோன்மணியம் புத்தக நிலையம் போய் வரலாம் என்றேன். பொடிநடையாக அவ்விடம் போனோம். கடைத் திறக்கவில்லை. மீண்டும் பேருந்து நிலையம் திரும்பினோம். சற்று நேரத்தில் அனந்தன் வந்தடைந்தார்.

அருகில் இருந்த கே.எஃப்.சி(KFC) திடீர் உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு சந்திப்பு இடத்திற்குக் கிளம்பினோம். அச்சமயம் கவிஞர் பிரான்சிஸ் அழைத்து தம் வருகையை உறுதிச் செய்தார். மதிய உணவின் போதே எங்களுக்குள் சிறு அறிமுகம் என சகஜமாக பேச ஆரம்பித்தோம்.

ஒரு மணிக்கு தொடர் வண்டி LRT? சேவையின் வழி பயணிக்க முடிவு செய்தோம். "ஏய் மச்சி அந்த 'கம்பார்ட்மெண்ட்ல' ஏறலாம் என்றார் முரளி. அங்கே இரு இந்திய பெண்கள் இருந்தார்கள். (ஹ்ம்ம் பய புள்ளைக்கு என்னா ஒரு ஆசை). அந்த 'கம்பார்ட்மெண்ட்' எங்களை கடந்து போகவும். எதிர் இருந்ததில் ஏறிக் கொண்டோம். அதன் பிறகு முரளி வருத்தப்பட்டாரா இல்லையா என்பதை அவரிடம் கேட்டுக் கொள்ளவும். வேண்டியோருக்கு தனிமடலில் அவரின் மின் மடல் முகவரி கொடுக்கப்படும்.
*********

தித்திவங்சாவில் இறங்கி சந்திப்பு இடத்தை நோக்கி நடந்தோம். சந்திப்பு இடத்தை சரியாக தேடி பிடிக்க தாவு தீர்ந்தது. இடத்தை தேர்ந்தெடுத்த புண்ணியவானுக்கு தொலைபேசி செய்தால் தொடர்பும் கிடைக்காமல் போனது. விசாரித்து பார்த்து சரியான இடத்தை அடைந்தோம். ஈரமான நினைவுகள் பதிவர் இனியவள் புனிதா தொடர்புக் கொண்டார். சரியான இடத்தில் காத்திருந்தார். இருந்தாலும் அது தான் சரியான இடமா என்பதில் அவருக்கு சந்தேகம்.

இடையே திருத்தமிழ் பதிவர் திரு.சுப நற்குணன் ஐயா தொடர்பு கொண்டு பேசினார். தன் வருகைத் திட்டம் தடைப்பட்டதால் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். வருகையாளர்களுக்கு வணக்கத்தை தெரிவிக்கும்படியும் கூறினார்.

கவிஞர் பிரான்சிஸ் எங்களுக்கு முன்னமே காத்திருந்தார். கவிஞர் ஏ.எஸ்.பிரான்சிஸ் 18க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 30 ஆண்டு காலமாக பத்திரிக்கை மற்றும் எழுத்துத் துறையில் பிரவேசித்து வருகிறார். 2000க்கும் மேற்பட்ட புது கவிதைகள் எழுதியுள்ளார். சமீபத்தில் கயல்விழி எனும் தலைப்பில் தமது வலைப்பதிவையும் தொடங்கியுள்ளார். அடுத்ததாக இரு நூல்கள் தயாரிப்பில் இருப்பதாகவும் சந்திப்பின் போது கூறினார்.

ஒர் இடமாக பார்த்து அமர்ந்தோம். சற்று நேரத்தில் அரங்கேற்றம் பதிவர் திரு மு.வேலன் மற்றும் கணைகள் பதிவர் பவனேஸ்வரியும் சந்திப்பு இடத்திற்கு வந்தடைந்தார்கள். திரு.மூர்த்தி(தாமதமாக கலந்து கொண்டார்), திரு.சண்முகம், திரு.குமரன் மாரிமுத்து, திரு.அ.நேசதுரை, மற்றும் வேலனின் நண்பர்(பெயர் மறதி மன்னிக்கவும்) சந்திப்பில் கலந்து கொண்ட பதிவு வாசகர்கள் மற்றும் எதிர்கால பதிவர்களுமாவர். சந்திப்பில் மொத்தம் 12 பேர் கலந்து கொண்டார்கள்.
********

(மூர்த்தி, ஆனந்தன், தெய்வ குழந்தை விக்கி, திரு.சண்முகம், கவிஞர் பிரான்சிஸ், திரு.நேசதுரை, திரு.குமரன்)

சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விடயங்கள்:

1) மலேசியாவில் பதிவர்களால் நிறைய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் மலேசிய தமிழ் வலைப்பதிவுலகில் அதிக வளர்ச்சியில்லை. மக்களிடையே அதன் குறைவான தாக்கத்திற்கு காரணம் என்ன?

முதலாவதாக மலேசிய தமிழர்களிடையே தமிழ் படிக்கும் ஆர்வம் குறைவாக இருப்பது காரணமாக அமைந்துள்ளது. அது போக புதிய/முக்கிய தகவல்கள் மலாய் மற்றும் ஆங்கில மொழியில் விரைவில் வெளிகாண்கிறது என்பதாலும். தமிழ் ஊடகம் விடுபட்டு போகிறது என்பதாக வாதங்களை முன் வைத்தனர்.

2) தமிழ் எழுத்துரு பிரச்சனை.

இங்கே பரவலான முறையில் தமிழ் எழுத்துரு செயல்பாடுகள் இல்லாமல் இருக்கிறது. சில தமிழ் மென்பொருள் கருவிகள் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இலவச மென்பொருள் பலரிடமும் அறிமுகமாகாமல் இருக்கிறது. (தேடல்கள் இல்லையோ?) சரியான முறையில் தமிழில் தட்டச்சு செய்ய பலருக்கும் பலவிதமான பிரச்சனைகள் இருந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்காள். சிலர் ஈ-கலப்பை மென்பொருளை பெற்றுக் கொண்டார்கள்.

3) இணைய தமிழ்.

இணையத்தில் தமிழ் இருப்பதே இன்னமும் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. இதற்கு காரணம் என்ன? வீட்டில் கணினி இருந்தால் பிள்ளைகள் கெட்டுப் போகும் எனும் தவறான மனப்பான்மை அடிப்படையில் விதைக்கப்பட்டுவிட்ட பட்சத்தில் கணினி மற்றும் இணையத்தைவிட்டு இன்னமும் பலர் விலகியே இருக்கிறார்கள். இச்சூழ்நிலையில் இணைய தமிழ் அவர்களிடையே அன்னியமான ஒன்றுதான்.

தமிழ் பள்ளிகளில் கணினி வகுப்புகளும், தமிழ் மென்பொருள் வசதிகளும் இருப்பினும் தமிழ் ஆசிரியர்களிடையே அதன் பயன்பாடு எப்படி உள்ளது என்பது கேள்விக்குறியே. அதன் செயல்பாடுகள் நன்முறையில் பயன்படுத்தப்பட்டால் மலேசியாவில் மின்தமிழ் ஊடகத்தில் நன் அறிமுகத்தையும் மாற்றங்களையும் கொண்டுவர முடியும். 500 தமிழ்ப்பள்ளிகளில் வீதம் ஒரு ஆசிரியர் இருந்தாலே போதும். (இது என் கருத்து).

4) பதிவர் சஞ்சிகை.

வலைப்பதிவுகள் பரவலான முறையில் அறிமுகம் ஆகாமல் இருக்கும் பட்சத்தில். தமிழ் அச்சு, ஒலி மற்றும் ஒளி ஊடகங்களும் அதை மக்களிடையே அறிமுகப்படுத்தும் முயற்சிகள் ஏதும் இதுவரையிலும் எடுக்கப்பட்டதில்லை. இது அவர்களின் வியாபாரம் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் இருட்டடிப்பாக கூட இருக்கலாம். அல்லது இணைய ஊடகத்தின் பேரில் நம்பிக்கையோ/அக்கறையோ இல்லாத போக்காகவும் இருக்கலாம்.

பதிவர்களால் பதிவிடப்படும் நல்ல பதிவுகளை தேர்வு செய்து வருடத்திற்கு இரு முறை சஞ்சிகை வடிவில் வெளியிடும் திட்டம் முன் நிறுத்தப்பட்டது. சஞ்சிகை வெளியிடும் அளவிற்கு நம்மிடம் போதுமான பதிவர்கள் இல்லாமல் இருக்கிறார்கள் என புனிதா கூறினார். மேலும் பதிவர்கள் கூடும் பட்சத்தில் இதை செயலாக்கம் செய்யலாம் என்றும் கூறப்பட்டது. அச்சு ஊடகத்தில் கவனம் செலுத்துவது நாம் பின்னோக்கிச் செல்கிறோம் என்பதை குறிப்பதாக முரளி கூறினார். சஞ்சிகையை மென் புத்தகமாக வெளியிடுவதே சிறந்ததாக கூறினார்.

சஞ்சிகை மின் புத்தகமாகவும் அச்சுவடிவிலும் வெளியிட தீர்வு செய்யப்பட்டது. அச்சுவடிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளை கொண்டு வருவது பலரிடையே மின்னூடகத்தை அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல் ஆவணமாக வைத்துக் கொள்ளவும் உதவும் என தீர்மானிக்கப்பட்டது. அடுத்த மாதம் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்பில் சஞ்சிகைக்கான வேளைகள் சமர்பிக்கப்படும்.

கூட்டுப்பதிவு, துறை சார்ந்த பதிவு, கருத்து சுதந்திரம் என பல விடயங்கள் மேலும் பேசப்பட்டன. அவற்றைப் பற்றிய தகவல்களை சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள் நிச்சயம் பதிவிடுவார்கள் என்பதை உறுதியோடு எதிர்ப்பார்க்கலாம்.

மேலும் பதிவு வாசகர்களுக்கு சில உதவித் தகவல்கள் வழங்கப்பட்டன. சில காலங்களில் அவர்கள் பதிவுலகில் பிரவேசிப்பார்கள் என எதிர்பார்ப்போம். 4 மணி அளவில் சந்திப்பு நிறைவு கண்டது.
*****

சந்திப்பில் கலந்துக் கொண்ட திரு.நேசதுரை அவர்கள் எங்களை அவர் வாகனத்தில் அழைத்துக் கொண்டார். மூர்த்தி அவருடைய நண்பர் மலேசிய பத்திரிக்கை ஒன்றில் பணியில் இருப்பதாகவும் அவரை சந்தித்துவிட்டுச் செல்லலாம் எனவும் கூறினார். நான், முரளி, அனந்தன், மூர்த்தி, மற்றும் திரு.நேசதுரை என ஐவரும் அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்குச் சென்றோம்.

வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வதை பற்றிய கேள்வி எழுந்த போது அதன் முக்கிய நிர்வாகி பேசிய தகவல் 'காமிடியாக' இருந்தது. ஏதோ ஒரு படத்தில் வரும் ஆனா வாராது என வடிவேலுவிடம் நகைச்சுவை செய்வதை போல் பேசிக் கொண்டிருந்தார்.

அறிமுகம் செய்யலாம் பிரச்சனை இல்லை என்றார். பிறகு, இணைய தமிழால் அவர்கள் வியாபாரம் பாதிக்கும் என்றார். மீண்டும் அனுப்பி வையுங்கள் போடலாம் என்றார். (குப்பைத் தொட்டியிலோ?).

பத்திரிக்கைக்கு அனுப்பப்படும் எனது படைப்புகளை கண்டபடி துண்டாடிவிட்டு பிரசுரிக்கிறீர்களே எதனால் என்றேன். சர்சைக்குறிய விடயங்களை நீக்கிவிட்டுதான் வெளியிடுவோம் என்றார்.

சரி எதனால் ஒரு படைப்பாளியின் படைப்பு வெளியிடப்படுவதை அவரிடம் அறிவிக்க மறுக்கிறீர்கள் என்றேன். அப்படி அறிவித்தால் நீங்கள் அந்த திகதியில் மட்டும் பத்திரிக்கை வாங்குவீர்கள் மற்ற நாட்களில் எதிர்பார்த்து வாங்க மாட்டீர்கள் என்றார். (என்ன ஒரு அல்பத்தனமான பதில். முட்டிக் கொள்ள பக்கத்தில் சுவர் தான் இல்லை. உமிழ் நீரை விழுங்கிக் கொண்டேன்.) வாழ்க பத்திரிக்கை உலகம்.

நான் சென்ற ஆண்டு அனுப்பிய கட்டுரைகளையும் கதைகளையும் இந்த வருடம் தான் வெளியிட்டார்கள். அதையும் வெட்டி குத்தி குதறி வெளியிட்டார்கள். இப்போது அந்த பத்திரிக்கைக்கு என் படைப்புகள் எதையும் அனுப்புவதில்லை.

தமிழ் நாட்டில் வெளியாகும் தமிழ் ஓசை நாளிகையில் வாரம் தோறும் தொடர்ந்து எழுதும் வாய்ப்புக் கிடைத்ததும் அங்கு மட்டுமே படைப்புகளை அனுப்புகிறேன். படைப்பாளிக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை மகிழ்ச்சியையும் மேலும் எழுத உற்சாகமும் கொடுக்கிறது.

அடுத்தபடியாக ஜெயபக்தி புத்தக நிலையம் சென்றோம். அதிஷ்டவசமாக புத்தக விற்பனை சிறப்பு தள்ளுபடியில் இருந்தது. ஏறக்குறைய ஒரு மணி நேரம் அங்கே செலவானது. மலிவு விற்பனை அறிவிக்கப்படவில்லையா அல்லது அறிவிக்கப்பட்டும் இந்நிலையா என்பது தெரியவில்லை. நாங்கள் அங்கிருந்த ஒரு மணி நேரமும் அதிகமான வாடிக்கையாளர்களை காண முடியவில்லை.

நம்ம ஆட்சி என்பது போல், அங்கிருப்பவர்களை நையாண்டி செய்து கொண்டு புத்தகங்களை பார்வையிட்டோம். (ஆம், வெறுமனே நிற்கும் அவர்களுக்கும் பொழுது போகனும் இல்லையா).

நான் வைரமுத்துவின் ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும், பாலகுமாரனின் செப்புப் பட்டயம் மற்றும் மலாயா பல்கலைக்கழக பேரவைக் கதைகள் என மூன்று புத்தகங்கள் வாங்கினேன். அனந்தன், முரளி மற்றும் மூர்த்தியும் அவர்களுக்கு தே